உலக அழிவும் மாயா இன மக்களும் - அறிந்திராத பல விரிவான தகவல்களின் தொகுப்பு .

அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான். அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, ‘தஞ்சைப் பெரிய கோவில்’
என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில். அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டது. அதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இங்கு நான் ராஜராஜ
தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன். இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம்,
இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம். தமிழ்நாட்டில் கி.பி. 985ம் ஆண்டு முதல் கி.பி. 1012 ஆண்டு வரை
சோழனை இழுப்பதற்குக் காரணம்.
ஆம்! அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்தது. ஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமா? என்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலை. கோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும், கலைகளையும், தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.
ஆனால் இது……..! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன
தெரியுமா….?
ஒரு மேலைத் தேச நாட்டவன், தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான். தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது.
அந்தப் படம் இதுதான்……..!


“முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போல” என்று சொல்வார்களே,அது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலை, பாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால், அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா…?
இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்து, எமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்கு,அந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…?ஆனால், அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை.
சம்பந்தமே இல்லாத இடத்தில், சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இது. இந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது.
அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான். தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.
அவை என்ன தெரியுமா……..?
மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும், சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன. அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார். இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆனால் அது உண்மை என்பதுதான்
மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது.
என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.

உண்மைதான். புதுக்கதைதான். புதுக்கதை மட்டும் அல்ல, புதிர்க்கதையும் கூட. எனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும். அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படத்தைப் போடுகிறேன் நீங்களே பாருங்கள்.
ஏதாவது தெரிகிறதா? அல்லது புரிகிறதா…? 

நூலை படியுங்கள் புரியும் ..இந்த மின்னூல் 2012இல் கொடுக்க வேண்டிய அவசியம் தானே அப்போதுதான் உலகம் அழிய போகிறது என்று சொன்னார்கள் என்று நீங்கள் மனதுக்குள் நினைப்பது எனக்கு தெரியும் அனால் இந்த புத்தகத்தின் அறிவியல் சார்ந்த கூற்று எந்த காலத்திலும் நாம் எடுத்து படிக்கும் பட்சத்தில் நமக்கு புரியாத புதிராகவே அமையும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இருக்காது .
நன்றி . ஒரத்தநாடு கார்த்திக் .
மின்னூல் ஆசிரியர் மற்றும் தொகுப்பு   : ராஜ் சிவா . 

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

 

Labels: ,7 Responses to " உலக அழிவும் மாயா இன மக்களும் - அறிந்திராத பல விரிவான தகவல்களின் தொகுப்பு . "

 1. மிக்க நன்றி நண்பரே!

 2. தரவிறக்கம் செய்து கொண்டேன்
  நன்றி நண்பரே

 3. Anonymous says:

  ancient aliens

 4. பானுமதி ராமகிருஷ்ணாவின் மாமியார் மற்றும் கான்ஸடபிள் கந்தசாமி - வெகு ஆண்டுகளுக்கு முன் ராணி முத்துவில் படித்தவை. மீண்டும் படிக்க ஆசை.

 5. அனைத்து நாவல்களும் அருமை முயற்சிக்கு, என்மனமார்ந்த பாராட்டுகள்

 6. அனைத்து நாவல்களும் அருமை முயற்சிக்கு, என்மனமார்ந்த பாராட்டுகள்

 7. அனைத்து நாவல்களும் அருமை; முயற்சிக்கு என் மனமார்ந்த பnராட்டுகள்.

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.