மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடித்தளம் – ஜேம்ஸ் ஆலன்/தமிழில் -சே.அருணாசலம்.

மனிதன் ஒரு வீட்டை எவ்வாறு கட்டத்தொடங்குகிறான்? கட்டி முடிக்கப்பட வேண்டிய வீட்டின் வரைப்படத்தை முதலில் கையில் கொள்கிறான்.

பின்பு எல்லா பகுதிகளையும் முழுமையாக, நுனுக்கமாக ஆராய்ந்து செயல் திட்டத்தை வடிவமைத்து கொள்கிறான்.அதன் பின்பு அத்திட்டத்திற்கு ஏற்ப அடிதளத்தில் இருந்து தொடங்குகிறான். அவன் தொடக்கத்தின்/ ஆரம்பத்தின்/ வரைபடத்தின்/ செயல்திட்டத்தின் முக்கியத்துவத்தை விளங்கி கொள்ளாதவனாக இருந்தால் அந்த கட்டிடத்திற்காக மேற்கொள்ளப்பட்ட எல்லா உழைப்பும் வீனாகிவிடும். ஒரு வேளை அந்த கட்டிடம் பாதியில் இடிந்து விழாமல் முழுமை அடைந்து இருந்தால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்துடனேயே எந்தப் பயன்பாடுமின்றி விளங்கும். இந்த விதி எல்லா முக்கிய செயல்களுக்கும் பொருந்தும்்.தெளிவான மனத்திட்டமும் அதைத் தொடங்கும் விதமும் இன்றியமையாதது.
இயற்கையின் படைப்பில் எந்த குறையையும் காணமுடியாது. எதுவும் அறைகுறையாக விட்டு விடபடவில்லை. அவள் குழப்பத்தை அறவே நீக்கியிருக்கிறான், அல்லது குழப்பம் என்பது முற்றிலுமாக அவளிடமிருந்து நீங்கி விட்டது. இந்த இயற்கையின் செயல்பாடுகளை எவன் ஒருவன் தன் செயல்பாடுகளில் கருத்தில் கொள்ளவில்லையோ அவன் உடனுக்குடன் தன்னுடைய ஆற்றலை முழுமையை மகிழ்ச்சியை வெற்றியை இழக்கின்றான்.

Foundation Stones to Happiness and Success James Allen
மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடிதளம் ஜேம்ஸ் ஆலன்
(தமிழில் சே.அருணாசலம் )

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE 

Labels:2 Responses to " மகிழ்ச்சிக்கும் வெற்றிக்குமான அடித்தளம் – ஜேம்ஸ் ஆலன்/தமிழில் -சே.அருணாசலம். "

  1. ஒரத்தநாடு கார்த்திக்கு நன்றி

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.