அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு.

தமிழ் நவீனக் கவிஞர்களில் முக்கியமானவரான லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைத் தொகுப்பு. அகம்-புறம் என்கிற எல்லைகளைத் தகர்த்து, புறத்தில்
நிகழும் நிகழ்வுகளை அகமனப் பதிவுகளோடு பதியும் கவிதைகள் குறிப்பிடத்தக்கவை. ‘உலக இலக்கியத்தில் திருக்குறளுக்கு இணையான இலக்கியம் இல்லை’ என்று முன்னுரையில் சொல்லும் மணிவண்ணன், தனது கவிதைகளையும் பொருள், இன்பம், அறம் என்றே பிரித்திருக்கிறார். பொருள் பகுப்பில் உள்ள கவிதைகள் சமூக நிகழ்வுகள் குறித்தும், இன்பம் பிரிவில் உள்ளவை காமம் மற்றும் காதல் குறித்தும் அறம் பகுப்பில் உள்ளவை எழுத்தாளனுக்கான சமூக அறம் குறித்தும் பேசுகின்றன. அறம் பிரிவில் உள்ள ‘பராக் பராக்’, ‘புத்தகத் திருவிழா’, ‘அப்ரூவர் வந்திருக்கிறேன்…’ பகடி கவிதைகளுக்கான சரியான சான்றுகள் எனலாம்!
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE -15 MB

Labels:1 Response to " அப்பாவைப் புனிதப்படுத்துதல் – லக்ஷ்மி மணிவண்ணன் கவிதைத் தொகுப்பு. "

  1. சிற்றிதழ்கள் குறித்த ஆய்வு புத்தகங்கள் இவற்றிள் உள்ளதா? சிற்றிதழ்கள் தொகுப்பு,

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.