பால்மரக் காட்டினிலே -அகிலன் மாஸ்டர் பீஸ் நாவல் .

மலேசியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை, தோட்டக் காடுகளை ஊடுருவிச் சென்று, அவர்களின் போராட்டங்களைச்
சித்தரிக்கும் வலுவான நாவல் ஆகும்.பாலன், கண்ணம்மா, வீரப்பன், வேலம்மாள், முருகன் என உணர்ச்சிப் பிழம்பான கதாபாத்திரங்களின் உயிரோவியமான இந்நாவல் தமிழக இளைஞர்களுக்குப் பாடநூலாகவும் உலா வருகிறது.மலையாளத்திலும் வெளிவந்துள்ளது.

அகிலன் தன் முன்னுரையில் கூறுகிறார்:
“வாழ்வதற்கென்று கப்பலேறிக் கடல் கடந்து சென்று இன்றும்கூட (1975-76) நன்றாக வாழமுடியாமல் வாயில்லாப்  பூச்சிகளாக நிற்கும் ஓரினத்தின் வரலாற்றுச் சிறுதுளியை இதில் நான் படம் பிடிக்க முனைந்துள்ளேன்....என்னுடைய குறைபாடுகளை நான் மூடி மறைக்கவில்லை. நான் எழுதும் இந்த வாழ்க்கையில் நேரடியான அனுபவம் பெறாதவன். தோட்டப்புறங்களில் வாழாதவன். ஆனாலும் தமிழ்நாட்டு எழுத்தாளன் ஒருவன் மேற்கொள்ளும் முதல் முயற்சி இது...எதிர்காலத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து வெளிவரப்போகும் தலைசிறந்த-தோட்டப்புற வாழ்க்கை கொண்ட- நாவல்களுக்கு, காலத்தால் சருகாய் உதிரும் இந்த நாவல் சிறிதளவு உரமாகப் பயன்படுமானால் அதையே நான் பெற்ற பெரும் பேறாகக் கருதுவேன்”. 

39 ஆண்டுகள் கழிந்தபின்னும் இந்த நாவல் ‘சருகாய் உதிர’வில்லை. ஆணிவேரிட்டு உயர்ந்த மரமாக நிற்கிறது.

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE

ZIPPYSHARE 

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.