ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி - தமிழில் ரா.கி.ரங்கராஜன் .

புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் என்ற இரண்டு மந்திரச் சொற்கள் மனதில் நுழையாதபட்சத்தில் உறவுகளில் சிக்கல் வருகிறது. புரிந்து கொள்ளுதல் இருந்துவிட்டால் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். குறிப்பாக, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக் கூடிய உரசல்கள் ஒழிந்து விடும். தனக்கு அடங்கியவளாக மனைவி இருக்க வேண்டும் என்று கணவன் எதிர்பார்ப்பதும், தன் பேச்சைக் கேட்டு நடப்பவனாக கணவன் இருக்க வேண்டும் என்று மனைவி எதிர்பார்ப்பதும் மிகத் தவறான போக்கு என்பதை சுமார் 282 பக்கங்களில் விரிவாக எடுத்துக் கூறிய ஆங்கில நூல் Men Are from Mars, Women Are from Venus என்பது. இதை எழுதியவர் ஜான் க்ரே (John Gray) என்கிற அமெரிக்க எழுத்தாளர். 50 மில்லியன் காப்பிகளுக்கும் மேலாக விற்ற சாதனைப் புத்தகம் அது.

அந்த நூலின் முக்கிய அம்சங்களை மூலத்தின் ஜீவன் கெடாமல் தமிழில் மொழிபெயர்த்து சுருக்கமாக 88 பக்கங்களில் ‘ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி' என்கிற நூலாக வழங்கியிருக்கிறார் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள்! பிரபல ‘குமுதம்' வாரஇதழின் முக்கியத் தூணாக பல்லாண்டுகள் ஜொலித்த ரா.கி.ர.வுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆங்கில நூல்களைத் தமிழில் அப்படியே வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் தமிழுக்கு ஏற்ப அழகுற மொழிபெயர்ப்பதில் வல்லவர் அவர் என்பதால் இந்த நூலைப் படித்தாலும் வேற்றுமொழி புத்தகம் படிக்கும் உணர்வே உங்களிடம் எழாது.

செவ்வாய்க் கிரகத்தில இருந்த ஆண்கள் டெலஸ்கோப் வைத்து வெள்ளிக் கிரகத்தைப் பார்த்தார்கள். அழகழகான பெண்களைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு விண்வெளிக் கப்பலைத் தயார் செய்து வெள்ளிக் கிரகத்தை அடைந்தார்கள். அங்கே கூடி மகிழ்ந்தவர்கள் பூமி என்கிற புதிய கிரகத்துக்கு வந்தார்கள். ஆரம்பத்தில் எல்லாமே அற்புதமாயிருந்தது; அழகாயிருந்தது. ஆனால் பூமியின் சுற்றுச்சூழல் அவர்களைப் பாதித்தது. ஒருநாள் காலை விழிக்கையில் ‘அம்னீஷியா' என்ற விசித்திரமான மறதி நோய் அவர்களைப் பற்றிக் கொண்டது. செவ்வாய் ஆண்களுக்கும் சரி, வெள்ளிப் பெண்களுக்கும் சரி தாங்கள் வெவ்வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்பது மறந்து விட்டது. தங்களுடைய வேறுவேறு தன்மைகளை மீறி நேசித்துக் கொண்டிருந்தது மொத்தமும் ஒரே இரவில் மறந்துவிட்டதில் அன்றுதொட்டு செவ்வாய் ஆண்களும், வெள்ளிப் பெண்களும் மோதிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.
இப்படி ஒரு தத்துவத்துடன் ஆரம்பிக்கிற புத்தகம் கணவன் மனைவி உறவின் கூறுகளை விரிவாக அலசுகிறது. சண்டை ஏன் வருகிறது என்பதற்கான காரணங்கள், மன்னிப்புக் கேட்டலின் மகத்துவம், மனைவியின் பிரியத்தைக் கணவன் சம்பாதித்துக் கொள்ள சுலபமான 40 வழிமுறைகள், மனைவி கோபமாக இருந்தால் (என்ன காரணத்துக்காக கோபம் வருகிறது என்கிற அலசலுடன்) எப்படிச் சமாதானப்படுத்த வேண்டும் என்கிற அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை விரிவாக அலசும் இந்நூல் இறுதியில் கணவன் மனைவி இருவருக்குமான அறிவுரைகளைத் தந்து, புரிந்து கொள்ளும் வாழ்வின் தத்துவத்தை படிப்பவருக்குள் ஆழமாக இறக்குகிறது.  
டவுன்லோட் லிங்க் :
 
 
இந்த நூலினை தமிழில் நாகலட்சுமி சண்முகம் என்பவரும் 377 பக்கங்களில் மொழிபெயர்த்துள்ளார் அதை படிக்க கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .
 
 
 

Labels: ,



Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.