சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )

சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .
பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதே கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிரூபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிய ‘சாண்டில்யன்’ இந்துஸ்தான் எனும் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

இந்துஸ்தான் பத்திரிகையில் இருக்கும்போது தான் இவருக்கு சினிமா

உலகுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. 1952ல் வெளிவந்த ‘அம்மா’ என்கிற படத்தின் திரைக்கதை வசனத்தை இவர் எழுதியிருக்கிறார்.
இதற்கு முன் 1949ல் ‘லேனா’ செட்டியாரின் ‘கிருஷ்ணபக்தி’ என்கிற படத்தில் ச.து.சு.யோகியார், சுத்தானந்த பாரதி ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதிய அனுபவமும் உண்டு. 1953ல் சித்தூர் வி.நாகையா தயாரிதத ‘என்வீடு’ என்கிற படத்திற்கும் சாண்டில்யன் வசனம் எழுதியுள்ளார்.

திரைப்பட உலகம் நிரந்தரமல்ல என்று அறிந்து வைத்திருந்த சாண்டில்யன்

மறுபடியும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வேலையில் அமர்ந்தார். அதில் ‘ஞாயிறு மலர்’ பகுதியை முழுமையாகக் கவனித்துக் கொண்டார். ‘உதயபானு, ‘இளையராணி’ போன்ற தொடர்புதினங்கள் இந்த மலரில் வெளிவந்தன.
இவரது புகழ்பெற்ற ‘ஜீவபூமி’ நாவல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளிவந்தது. பத்திரிகைத் தொழிலை தொழிற்சங்க அமைப்பினுள்

கொண்டுவர வேண்டுமென்று குரல் கொடுத்த ஆரம்பப் பத்திரிகையாளர்களில் ‘சாண்டில்யன்’ மிகவும் முக்கியமானவர்.
அதேபோல் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்ததோடு சில முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார்.
இவர் ஒரு கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். இவரது சரித்திர புதினங்கள் பல ‘குமுதத்தில்’ தொடராக வெளிவந்தது. இவர் தொடர் வெளிவரும் காலத்தில் ‘குமுதத்தின்’ சர்குலேசன் மிக அதிகமாக இருக்குமாம்.

முக்கியமாக ‘குமுத’த்தில் இவர் எழுதிய கன்னிமாடம், யவனராணி, கடல்புறா போன்ற தொடர்கள் வெகுஜென வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வருணைகள் இணைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல்


‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார்.
இவர் எழுதிய நூல்களைப் பட்டியலிடுவது சற்று சிரமம்தான். இவர் எழுதிய சில முக்கயி நூல்கள். ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை, கன்னிமாடம், கடல்புறா, யவனராணி மற்றும் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு.
இவரது சரித்திரப் புதினங்களுக்கு இலக்கிய ரீதியாக பெரிய மதப்பொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்ந்த இலக்கிய விமர்சனங்கள்தான் இதற்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும்.

டவுன்லோட் லிங்க் :

அவனி சுந்தரி

சந்திரமதி            

சேரன் செல்வி

சித்தரஞ்சனி

இளைய ராணி

இந்திர குமாரி

ஜலதீபம் பாகம் -1

ஜலதீபம் பாகம் -2

ஜலதீபம் பாகம் -3

ஜீவபூமி 

கடல் வேந்தன்

கடல் புறா பாகம் -1

கடல் புறா பாகம் -2

கடல் புறா பாகம் -3

கடல் ராணி

கன்னி மாடம்

கவர்ந்த கண்கள்

காவேரி மைந்தன் பாகம் -1(அனுஷா வெங்கடேஷ் )

காவேரி மைந்தன் பாகம் -2(அனுஷா வெங்கடேஷ் )

காவேரி மைந்தன் பாகம் -3(அனுஷா வெங்கடேஷ் )

மாதவியின் மனம்

மது மலர்

மலை அரசி

மஞ்சள் ஆறு

மலை வாசல் 

மங்களதேவி  

மன்னன் மகள்

மோகன சிலை

மோகினி வனம்

மூங்கில் கோட்டை

நாக தீபம்

நாக தேவி

நங்கூரம்

நீல ரதி

நீல வள்ளி

நீள் விழி

பல்லவ பீடம்

பல்லவ திலகம்

பாண்டியன் பவனி

ராஜ யோகம்

ராணா ஹமீர்

ராஜ முத்திரை பாகம் -1

ராஜ பேரகை பாகம் -1

ராஜ பேரகை பாகம் -2

ராஜ பேரகை பாகம் -3

துறவி

உதய பானு

விஜய மகாதேவி 1

யவன ராணி பாகம் -1

யவன ராணி பாகம் -2


Labels:42 Responses to " சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் ) "

 1. மிகவும் அற்புதம் வாழ்க உங்கள் தொண்டு நன்றி

 2. அற்புதம் நான் தேடிய நூல்கள் ஒரே இடத்தில். நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

 3. Anonymous says:

  kindly post vijayamahadevi remaining volume also especially 3 if possible. i heard from lot that it has lot of history

 4. Thanks Lot. Its a great work.

 5. Thanks Lot. Its a great work...

 6. we want request for vijayamagadevi 2&3

 7. சில புத்தககங்களை பதிவிறக்கம் செய்ய முடிய வில்லை நண்பரே.

 8. Anonymous says:

  கீரனூர் நடராஜன் எழுதிய ஜாதக அலங்காரம் நூலினை பதிவேற்றம் செய்ய இயலுமா

 9. நன்றிகளும் வாழ்த்துக்களும்...

 10. உண்மையிலேயே பிரமித்துப் போனேன்; அருமையான தொகுப்புகள்.இன்றைய என்னுடைய பிறந்த நாள் பரிசாக நினைக்கிறேன். நன்றி!

 11. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே .

 12. வாழ்த்திய அனைவர்க்கும் எனது நன்றிகள் .

 13. Anonymous says:

  thankyou verymcuh. i need many more tamilvanan marma kathaikal veandum ?? try to more upload?

 14. Anonymous says:

  Thanks for sharing books. Unable to download more bookS. Getting an authorised download. Pls help me to assist... selva

 15. Thanks karthick very nice attempt great idea congratulations I am from thennamanadu

 16. Thanks karthick very nice attempt great idea congratulations I am from thennamanadu

 17. SUPERB KARTHIK. I AM STARTED TO DOWNLOAD. THANKS.

 18. Anonymous says:

  Please Upload Sandilyan Alai Arasi and ManaMogam Novels

 19. .அருமையான பதிவு நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்

 20. Anonymous says:

  pls post rajamuthirai 2 part

 21. சஹானா says:

  தங்களின் அற்புதமான சேவைக்கு மிகவும் நன்றி

 22. Thanks How about Rajathilakam

 23. Thanks tooooooooooooooooooooooooooooooooooooooooo

 24. எவ்வளவு பெரிய உதவி செய்துள்ளீர்கள் தெரியுமா?நன்றி,நன்றி.

 25. Anonymous says:

  very thanks

 26. I am not able to download the pdf formate, pls suggest which format for Android, Thanks in advance, Acharyaan Narmaada R Das.

 27. Anonymous says:

  Super Karthick

 28. A.dayanandam all books upload pls

 29. A.dayanandam history novel upload pannunka pls

 30. ப்ளீஸ், ராஜ முத்திரை மற்ற பாகங்கள் கிடைக்குமா ?

 31. sir please upload sandilyan's novel VILAI RANI

 32. தயவு செய்து சண்டில்யன் நாவல் விலை ராணி பதிவேற்றம் செய்யவும்.நீங்கள் மேற்கூறியது போல் சண்டில்யனின் எழுத்துக்கு இலக்கிய ரீதியான மதிப்பு குறைவாக உள்ளது.ஆனால் அவரின் வர்ணனை & யுத்த வியூகங்கள் போல் வேறு எந்த எழுத்தாளரும் எழுதியதும் இல்லை.நான் மிகவும் ரசித்த கதைகள் பெரும்பாலும் அவருடையது தான்.தங்களின் பதிவேற்ற முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். மேலும் தங்களின் பதிவான ”சிவா முத்தொகுதி” படித்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.தங்களின் மேலான முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

 33. மிக்க நன்றி

 34. மிக்க நன்றி

 35. வாழ்த்துக்கள்.

 36. Anonymous says:

  Raja Muthirai 2 not available since some years.....

 37. மிக நன்றி நண்பரே

 38. தங்களது அரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்

 39. அரிய முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்

Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.