சிக்கன் வித் பிளம்ஸ் -தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட காமிக்ஸ் .

புத்தகத்தின் ஆசிரியர்/ ஓவியர் சத்ரபி (Marjane Satrapi) Persepolis கதையின் மூலம் பிரபலமானவர். இவரது ஓவியங்களில் குறைந்தபட்ச தகவல்களே இருக்கும்.
சிறுசிறு கோடுகளின் வழியாகவே கருப்பு வெள்ளையில் கதையை கண்முன் நிறுத்துவது இவரது பாணி. A minimalistic art style. சோகமானவொரு கதையை நகைச்சுவை கலந்து தரும் நுட்பம் இவரது சிறப்பம்சம். இக்கதையை சமீபத்தில் தமிழில் இன்டர்நெட்டில் காண நேரிட்டது. அதை இங்கே உங்களுக்கு சுலபமான டவுன்லோட் லிங்காக கொடுத்துள்ளேன் .....

கதையை பற்றி  சில வரிகள் :

சட்ராபியின் முன்னைய கதையான Persepolis ல் இருந்தளவு அரசியல் இக்கதையில் இல்லை. எனினும் சில பாத்திரங்கள் ஈரானின் அரசியல் நிகழ்வுகள் குறித்து தம் பார்வையை முன்வைக்கவே செய்கின்றன.
கதை நெடுகிலும் மனதை தும்பை விரல்களால் வருடிச்செல்லும் ஏராளமான சம்பவங்கள் உண்டு. சூபி ஞானி, மற்றும் மரண தேவன் அஸ்ரேலுடன் நாசீர் நடாத்தும் உரையாடல்கள் அற்புதமானவை.
மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாசீர், தான் இன்னமும் இறக்காமல் இருக்க காரணம் யாரோ தனக்காகப் பிரார்த்திப்பதே என எண்ணுகிறான். அது தன் மூத்த மகளாக மட்டுமே இருக்க முடியும் எனவும் அவன் கருதுகிறான். ஆனால் உண்மையில் அவனிற்காக பிரார்திப்பது யார் என்பது தெரியவரும் அந்தச் சித்திரப்பக்கம் மனங்களை உணர்ச்சி சுனாமியாக்கிவிடும்.
நாசீர் ஏன் அந்த டார் வாத்தியத்தை அளவற்ற அன்புடன் இசைக்கிறான், நேசிக்கிறான்? அந்த டார் அவன் குருவால் அவனிற்கு வழங்கப்பட்டது என்பதனாலா? இல்லை நண்பர்களே, அந்த டார் வாத்தியத்தில் நாசீர் இசைக்கும் ஒவ்வொரு இசை வரியும் அவன் இழந்த காதலியின் மேல் கொண்டுள்ள இசைக்க முடியாக் காதலின் மொழிபெயர்ப்பே.

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE
ZIPPYSHARE

Labels:Leave A Comment:

மின்னஞ்சல் மூலம் தொடருங்கள்

இதுவரை பகிர்ந்த பதிவுகள்

OrathanaduKarthik. Powered by Blogger.